ஏமனில் 3 ஆண்டுகளில் 85,000 குழந்தைகள் பலி!
Wednesday, November 21st, 2018
கடந்த 3 ஆண்டுகளாக ஏமன் நாட்டில் இடம்பெற்றுவரும் போரில் மட்டும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 85,000 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்று மதிப்பீடுகள் தெரிவிப்பதாக முன்னணி தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஏமனில் உயிரிழந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, பிரிட்டனின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான பர்மிங்ஹாமிலுள்ள ஒட்டுமொத்த 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கைக்கு சமம் என்று டுசேவ் தி சில்ரன்டு என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏமனில் அதிகபட்சம் 14 மில்லியன் மக்கள் பஞ்சத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்திருந்தது.
உலகிலேயே மோசமான நெருக்கடியாக கருதப்படும் ஏமன் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஐ.நா சபை முயற்சித்து வருகிறது.
Related posts:
பிரித்தானியா வெளியேறிய பின்னரே புதிய வர்த்தக பேச்சுக்கள்!
குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் வீடு திரும்பினர்!
தனக்கு சொந்தமான போர்க்கப்பலை மூழ்கடித்த உக்ரைன் - வெளியான அதிர்ச்சி காரணம்!
|
|
|


