எபோலா பரவும் வீதம் அதிகரிப்பு – உகாண்டாவில் இரண்டு மாவட்டங்கள் முடக்கம்!
Sunday, October 16th, 2022
எபோலா தொற்று நோய் பரவும் அபாயம் காரணமாக உகாண்டாவில் இரண்டு மாவட்டங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளன. உகாண்டா ஜனாதிபதி யவேரி முசவேனி கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது, முபெண்டே மற்றும் கசாண்டா மாவட்டங்களில் 21 நாட்களுக்கு தடை அமுலில் இருக்கும் என்று அறிவித்தார்.
அதன்படி, அந்த மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து கடைகள் மற்றும் தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளன.
செப்டெம்பர் 20 ஆம் திகதி தொடக்கம் எபோலா வைரஸால் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
அமெரிக்காவின் முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் – பிரான்ஸ்!
ஏமனில் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவு!
இந்தியாவில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதுண்டு கோர விபத்து - 12 பேர் பலி!
|
|
|


