எண்ணெய் கிணறு தீபிடித்து விபத்து : இந்தோனேஷியா வில் 15 பேர் பலி!

எண்ணெய் கிணறு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தோனேஷியாவின் மேற்கே அமைந்த அசே மாகாணத்தில் எண்ணெய் கிணறு ஒன்று அமைந்துள்ளது. இங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலியாகி உள்ளனர்.
40க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயமடைந்து உள்ளனர்.இந்த நிலையில் அந்நாட்டின் பேரிடர் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், குழாய்களை வெல்டிங் செய்யும்பொழுது இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
Related posts:
304 பேரை பலிகொண்ட மூழ்கிய கப்பல் கடற்படுக்கையிலிருந்து அகற்றப்பட்டது!
சுதந்திரம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரண்டு முக்கிய புள்ளிகள் கைது!
பைடன் உட்பட 12 அமெரிக்க உயரதிகாரிகள் ரஷ்யாவிற்குள் நுழையத் தடை!
|
|