எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முர்சியின் தண்டனை உறுதி!
Monday, September 18th, 2017
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி கலாநிதி முஹம்மத் முர்சிக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவருக்கு எதிராக வழங்கப்பட்ட தண்டனைக்கு முர்சி சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த இந்த மேன்முறையீட்டை நிராகரித்துள்ள நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனையை நேற்று(16) உறுதி செய்தள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
எகிப்தில் ஆயுள் தண்டனை என்பது 25 வருடங்கள் எனக் கூறப்படுகின்றது. எகிப்தின் முக்கிய ஆவணங்களை கட்டாருக்கு வழங்கியதாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியே இவர் மீது இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக முர்சி சார்பானவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற முர்சி 2013 ஜூலை 3 ஆம் திகதி வரை ஆட்சி செய்தார். பின்னர் இராணுவ சதிப் புரட்சியினால் இவர் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


