எகிப்தின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக் விடுதலை!

Saturday, March 25th, 2017

 

அராபி வசந்தம்´ எனப் பெயரிடப்பட்ட 2011 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சியின் பின்னர் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் நேற்று(24) ஆம் திகதி விடுவிக்கப்பட்டுள்ளார்.

சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் கய்ரோ இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  முன்னாள் ஜனாதிபதி அன்வர் சதான் கொலை செய்யப்பட்ட பின்னர் அதிகாரத்திற்கு வந்த முபாரக் 4 வது ஜனாதிபதியாக செயற்பட்டார்.

2011 ஆம் ஆண்டு அமைதியான மக்கள் எழுச்சியின் போது நூற்றுக்கணக்கானவர்களை கொலை செய்ததாக ஹொஸ்னி முபாரக் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

Related posts: