அமெரிக்காவில் துப்பாக்கிகளை விரைவாக்கும் கருவிக்குத் தடை!

Friday, February 23rd, 2018

துப்பாக்கிகளை விரைவாக சுடும் வகையில் மாற்றியமைக்க பயன்படுத்தப்படும் கருவிகளுக்கு தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ளார்.

இந்த கருவியை பயன்படுத்தியே கடந்த ஆண்டு லாஸ் வேகாஸ் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிதாரி ஒருவர் 58 பேரை சுட்டுக் கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருவி மூலம் சாதாரண துப்பாக்கியை கொண்டு ஒரு நிமிடத்தில் பல நூறு சுற்றுகள் சுட முடியும்.

இதனை சட்டவிரோதமாக்கும் செயல்முறைகளை மேற்கொள்ளும்படி நீதித் திணைக்களத்திற்கு டிரம்ப் வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரையில் உத்தரவிட்டார்.

புளோரிடா பாடசாலை ஒன்றில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாடு குறித்து மீண்டும் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய 19 வயது நிக்கலஸ் க்ரூஸ், சட்டபுூர்வமாக அந்தத் துப்பாக்கியை வாங்கியதாகத் தகவல்கள் கூறின.

Related posts: