ஊழல் தண்டனையை குறைக்கும் ஆணை ரூமேனியாவில் இரத்து!

Monday, February 6th, 2017

ஊழலுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகளைக் குறைக்க இருந்த  ஆணையொன்று ரூமேனியாவில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை.

பிரதமர் கோரீன் கிரென்டியாநோவால் நடத்தப்படவிருந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் இந்த ஆணை முறைப்படி ரத்து செய்யப்படும் என்று பிரதமர் வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்த ஆணை ரத்து செய்யப்படுவது உறுதியாவது வரை, தாங்கள் இருக்கின்ற இடத்தை விட்டு அகல போவதில்லை என்று 6-வது நாளாக தொடர்ந்து போராட்டக்காரர்கள் அரசு கட்டடத்திற்கு வெளியே கூடியிருந்தனர்.

திருத்தியமைக்கப்பட்ட ஒரு சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் முன்வைக்க அரசு எண்ணியிருப்பதாகவும் போராட்டக்காரர்கள் கவலையடைந்துள்ளனர்.

தங்களுடைய முன்மொழிவுகளால் சிறை நிரம்பி வழிவது குறையும் என்பது அமைச்சர்களின் வாதமாக இருக்க, இந்த நடவடிக்கைகள் ஊழலுக்கு ஊக்கமளிக்கும் என்றும், குற்றவாளிகளின் நடவடிக்கைகளில் இருந்து அவர்களை பாதுகாக்கும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

_93970949_gettyimages-630945522

Related posts: