உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவராக பதவியேற்றார் நிகோசி ஒகோன்ஜோ இவெலா!

Wednesday, March 3rd, 2021

உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவராக நைஜீரியாவின் முன்னாள் நிதியமைச்சரான நிகோசி ஒகோன்ஜோ இவெலா பதவியேற்றுள்ளார்.
சர்வதேச நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், ஏற்றுமதி உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதற்காக சுவிட்சர்லாந்தில் உலக வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்டது.
இதுவரை இந்த அமைப்புக்கு ஆண்களே தலைவராக இருந்த சூழலில், தற்போது முதன்முறையாக ஆபிரிக்க பெண் ஒருவர் பதவியேற்றுள்ளார்.
நிகோசி ஒகோன்ஜோவின் பதவிக்காலம் வரும் 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31 ஆம் திகதியுடன் நிறைவடையும்
நைஜீரியாவின் நிதியமைச்சராக இரண்டு முறை பணியாற்றியுள்ள நிகோசி, 25 ஆண்டுகளாக உலக வங்கியிலும் சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: