உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒமிக்ரான் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Sunday, November 28th, 2021

வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் (Omicron) வைரஸ் தொற்று உலக நாடுகளில் இதுவரை 113 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

டெல்டா திரிபை விடவும் வீரியமிக்கது என அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஒமிக்ரான் (Omicron) என்னும் புதிய கோவிட் வைரஸ் திரிபு தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இதுவரை ஓமிக்ரான் (Omicron) வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தென்னாபிரிக்காவில் 99 பேரும், போட்ஸ்வானாவில் 6 பேரும், ஹாங்காங்கில் 2 பேரும், இங்கிலாந்தில் 2 பேரும், செக் குடியரசில் ஒருவரும், பெல்ஜியத்தில் ஒருவரும், இஸ்ரேலில் ஒருவரும், இத்தாலியில் ஒருவரும் ஆக இதுவரை 113 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் தென்னாபிரிக்காவில் 990 பேருக்கும், போட்ஸ்வானாவில் 9 பேரும், இஸ்ரேலில் 7 பேரும், நெதர்லாந்தில் 61 பேரும், ஜேர்மனியில் 3 பேரும், டென்மார்க்கில் 2 பேரும், ஆஸ்திரியாவில் ஒருவரும் என தொத்தமாக 1073 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுவதாகவும் ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய ஒமிக்ரான் மாறுபாடு தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்திற்கு புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. புதிய மாறுபாடு வேகமாக பரவக்கூடும் அபாயத்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

உலக நாடுகள் தற்போது தென்னாப்பிரிக்க நாடுகளுக்கான பயணத் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி, மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

000

Related posts: