உலகை விட்டு பிரிந்தார் இளவரசர் பந்தர் பின் அப்துல் அஸீஸ்!

சவுதி மன்னர் சல்மானின் மூத்த சகோதரர் இளவரசர் பந்தர் தனது 96 வயதில் காலமாகியுள்ளதை சவூதி ரோயல் கோர்ட் உறுதி செய்துள்ளது.
இளவரசர் பந்தரின் மூன்று மகன்களும் சவுதியில் முக்கியமான பதவிகளை வகிக்கிறார்கள். இளவரசர் பைசல் பின் பந்தர் ரியாத்தின் ஆளுநராகவும், இளவரசர் அப்துல்லா பின் பந்தர் தேசிய காவலருக்கு தலைமை தாங்குகிறார் மற்றும் இளவரசர் காலித் பின் பந்தர் மன்னர் சல்மானின் ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.
இன்று மக்காவில் உள்ள கிராண்ட் மசூதியில் இஷா பிரார்த்தனைக்குப் பிறகு இறுதி பிரார்த்தனை செய்யப்படும் என்று சவுதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.
1923-ல் பிறந்த இளவரசர் பந்தர் தனது வேண்டுகோளின் பேரில் நாட்டில் எந்த பதவியையும் ஏற்கவில்லை. இளவரசரின் மறைவுக்கு அரபு நாடு தலைவர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Related posts:
இரு குடும்பங்களை சேர்ந்த 11பேர் சுட்டுக்கொலை!
மெல்ஃபோன் தாக்குதலை திட்டமிட்டதாகக் கருதப்படும் நபர் கைது!
வாகன விபத்து: துபாயில் 17 பேர் உயிரிழப்பு!
|
|