உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவிப்பு!
Sunday, November 5th, 2023
உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மத்தியபிரதேச சட்டப் பேரவைக்கான தேர்தல் எதிர்வரும் 17ஆம் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வேளையிலேயே அவர் இதனைத் தெரித்துள்ளார்.
இந்தியாவை காங்கிரஸ் ஆட்சி செய்தபோது வெளிநாடுகளில் உள்ள மக்கள், இந்தியாவை ஒரு வலுவிழந்த நாடாக பார்த்தனர். ஆனால் பாஜக தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர் நாடு வலிமையடைந்து வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியால் நாடு மிகப்பெரிய சக்தியாக வளர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சர்வதேச அமைப்புகள் இந்தியாவின் வளர்ச்சி குறித்து அவதானம் செலுத்தி வருவதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
0000
Related posts:
நெற்செய்கைக்கு ஏற்படும் சேதங்களுக்கு மாத்திரமே நட்டஈடு - அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!
புதிய மின் கட்டண அதிகரிப்பை பொதுமக்களால் தாங்கிக்கொள்ள முடியாது - மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம...
சீனாவில் திருமணமாகாதவர்கள் சட்டபூர்வமாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி!
|
|
|


