அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா பெறுமதி வீழ்ச்சி!

Tuesday, March 14th, 2023

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றையதினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 319 ரூபா 84 சதமாகவும், விற்பனை பெறுமதி 335 ரூபா 68 சதமாகவும் பதிவாகியுள்ளது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்க டொலர் மற்றும் ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு உயர்ந்து வந்திருந்தது.

எனினும், கடந்த வெள்ளிக்கிழமை (10) முதல் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு மீண்டும் சரிந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது

Related posts:

மின்னுற்பத்திக்கான எரிபொருள் இன்மையால் வார இறுதி நாட்களிலும் மின்வெட்டு - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ...
அனைவரும் ஓரணியில் பயணித்தால் மட்டுமே நாடு மீளெழுச்சி பெறும் - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவ...
சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக ஐந்தாண்டு காலம் பணியாற்ற சீன மக்கள் கட்சியினால் ஏகமனதாக ஒப்பு...