உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நோர்வே முதலிடத்தில்

Wednesday, March 22nd, 2017

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நோர்வே முதலிடம் பிடித்துள்ளது.சர்வதேச மகிழ்ச்சி தினம் உலகம் முழுவதும் நேற்று (20 )கடைப்பிடிக்கப்பட்டது.

இதனையொட்டி, சமூக ஆதரவு, நம்பிக்கை, வாழ்க்கை முடிவுகளை எடுக்கும் சுதந்திரம், பெருந்தன்மை உள்ளிட்ட 6 காரணிகளைக் கொண்டு உலகின் அதிக மகிழ்ச்சியான நாடு எது? என சமீபத்தில் ஆய்வொன்று நடத்தப்பட்டது. இதில் அதிக புள்ளிகள் பெற்று நோர்வே நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது.

உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா இந்தப் பட்டியலில் 14 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது மேலும் இந்த பட்டியலில் இலங்கை 120 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதில் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகளின் பட்டியல் பின்வருமாறு…

1.நோர்வே (7.537)
2.டென்மார்க் (7.522)
3.ஐஸ்லாந்து (7.504)
4.சுவிட்சர்லாந்து (7.494)
5.பின்லாந்து (7.469)
6.நெதர்லாந்து (7.377)
7.கனடா (7.316)
8.நியூசிலாந்து (7.314)
9.அவுஸ்திரேலியா (7.284)
10.சுவீடன் (7.284)

Related posts: