உயர் நீதிமன்றத்திடம் வெள்ளை மாளிகை கோரிக்கை!

Saturday, June 3rd, 2017

முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வருபவர்களின் பயணத்திற்கு மீண்டும் தடை விதிக்கும்படி அமெரிக்க உயர் நீதிமன்றத்திடம் வெள்ளை மாளிகை கோரியுள்ளது

இந்த தடை பாரபட்சமான தன்மையை கொண்டுள்ளதாக தெரிவித்த அமெரிக்க கீழ் நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னர் மறுத்திருந்தது சர்ச்சைக்குரிய இந்த விவகாரம் அமெரிக்காவில் பல தரப்பினராலும், கடந்த காலங்களில் விமர்சனத்திற்கு உட்பட்டது

இந்த நிலையில், தற்போது கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து இரண்டு அவசர மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனசம்பந்தப்பட்ட நீதியரசர்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிறைவேற்று அதிகாரங்களுக்கு அமைவாகவும் அமெரிக்க சட்ட திட்டத்திற்கு உட்பட்ட வகையில், செயற்படுவர் என அமெரிக்க நீதி திணைக்களத்தின் பேச்சாளர் சாரா இஸ்குவா புளோரஸ் தெரிவித்துள்ளார்

இதன் மூலம் அமெரிகாவில் வாழும் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்ற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்இதேவேளை, சோமாலியா, ஈரான், ஈராக், சிரியா, சூடான், லிபியா மற்றும் யேமன் போன்ற நாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்காவினுள் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட வேண்டும் என்ற ஆவணத்தில் டொனால்ட் ட்ரம்ப் கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: