உக்ரைன் கிறீமியா மீது தாக்குதல்!

Friday, August 12th, 2016

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிறீமியாவுக்குள், உக்ரைனினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குற்றஞ்சாட்டியுள்ளார். எனினும், அந்தக் குற்றச்சாட்டை, உக்ரைன் மறுத்துள்ளது.

உக்ரைனின் இராணுவப் புலனாய்வுப் பிரிவால் மேற்கொள்ளப்பட்ட ஆயுதக் தாக்குதல் முயற்சியை முறியடித்ததாகவும், அதன் பின்னர் மீளத் தாக்கியதாகவும், ரஷ்யாவின் பாதுகாப்பு முகவராண்மை தெரிவித்தது. ஓகஸ்ட் 6ஆம் 7ஆம் திகதிகளில் இந்தத் தாக்குதல் முயற்சிகளில், தமது அதிகாரியொருவர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்த அம்முகவராண்மை, எதிரணியைச் சேர்ந்த சிலரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி புட்டின், “இது மிகவும் ஆபத்தான செய்தி” என விளித்ததோடு, உக்ரைனானது, பயங்கரவாதத்தைப் பின்பற்றுவதாகவும் குற்றஞ்சாட்டினார்;. அத்தோடு, தங்களுடைய தரப்பில் இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யாவின் குற்றச்சாட்டுகளை மறுத்த உக்ரைன், அவை உண்மையற்றவை எனக் குறிப்பிட்டது.

Related posts: