அப்பிள் பழங்களால் ஆபத்தா? அதிர்ச்சியூட்டும் தகவல்!

Saturday, May 5th, 2018

பழங்களின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் அப்பிள் பழங்களில் மெழுகு முலாம் பூசப்படுகிறது என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தோட்டங்களில் இருந்து பறிக்கப்பட்ட அப்பிள் பழங்கள் எமக்கு வந்து சேருவதற்குள் பல நாள்கள் உருண்டோடி விடுகின்றன. அதுவும் இயற்கைத் தன்மையுடன் எமக்கு வந்து சேருவதில்லை. செயற்கையாக மெழுகு முலாம் பூசப்பட்ட பழங்களே எமக்கு வந்து சேரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. கனி என்றாலே கனிவுத் தன்மை இருக்கத்தான் செய்யும். இது அப்பிள் பழங்களுக்கும் பொருந்தும். அழுகிப் போனால் வியாபாரிகளுக்கு ந~;டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் செயற்கை முறையில் பழங்களைப் பாதுகாத்து வருகின்றனர். இதற்காக அப்பிள் பழங்களில் மெழுகு முலாம் பூசப்படுகிறது என்கின்றன பன்னாட்டு ஊடகங்கள்.

அதாவது மிகப் பெரிய தொட்டியில் இளஞ்சூட்டுடன் கூடிய மெழுகு கலவையில் அப்பிள் பழங்கள் கொட்டப்படுகின்றன. சிறிது நேரத்தில் அந்தப் பழங்களை எடுத்து துணியால் துடைத்து அதனை அட்டைப் பெட்டிகளில் அழகாக அடுக்கி பல்வேறு இடங்களில் விற்பனைக்காக வைத்து விடுகிறார்கள். இந்த பழங்கள் 15 நாள்களுக்கு மேல் கெட்டுப்போகாமல் இருக்கும். மெழுகு முலாம் பூசப்பட்ட இந்த பழங்கள் பார்த்தவுடனேயே சாப்பிட தூண்டும் வகையில் பளிச்சென்று காட்சி அளிக்கும். அப்பிள் பழங்களின் தோல் பகுதியை நகங்களால் சுரண்டிப் பார்த்தால் மெழுகுத் துகள்கள் ஒட்டியிருப்பது தெரியவரும். இதன் மூலம் நல்ல பழங்களையும் தீயவற்றையும் இனங்காணலாம். வயிற்றுக்குள் செல்லும் மெழுகு, நமக்குப் பல்வேறு நோய்களைக் கொண்டுவந்து சேர்க்கிறது. குறிப்பாக செரிமானக்கோளாறு, நெஞ்சு எரிச்சல், குடல் புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு ஆகியவை ஏற்பட்டு உயிருக்கு உலை வைக்கும் அளவுக்கு சென்றுவிடுகிறது. அவதானம் மிக அவசியம்

Related posts: