கடும் மழை: சிட்னி நகரில் இயல்பு நிலை பாதிப்பு!

Tuesday, February 11th, 2020

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் மழை பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக, பல்லாயிரக்கணக்கானோரின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சிட்னி நகரில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 391.5 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதுடன், ஆபத்தை விளைவிக்கக் கூடிய வெள்ளம் ஏற்படக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, மழையால் ஏற்பட்ட பிரச்சனைகள் ஒருபுறமிருக்க, சமீப மாதங்களாக நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் பரவிய காட்டுத்தீ இதன் மூலம் முடிவுக்கு வந்திருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகள் வெள்ளத்தால் மிகவும் எளிதாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், வேகமாக நகரும் வெள்ளம் அதிக அளவிலான குப்பைகளை அடித்து வரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

Related posts: