ஈரானின் அணுஉலைமீது இஸ்ரேல் சைபர் தாக்குதல்-!

Monday, April 12th, 2021


இஸ்ரேல் ஈரானின் அணுஉலை மீது சைபர் தாக்குதலை மேற்கொண்டு சேதத்தை ஏற்படுத்திள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் நடான்சில் உள்ள தனதுஅணுநிலை மீது பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
நடான்சில் உள்ள அணுநிலையத்தில் யுரேனியத்தை பதப்படுத்தும் சாதனமொன்றை தொடக்கிவைத்த மறுநாள் இந்த பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றுள்ளது என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி விவகாரங்களிற்கான முக்கிய அதிகாரி அலிஅக்பர் சலேகி இதனைதெரிவித்துள்ள அதேவேளை இந்த பயங்கரவாத தாக்குதலை யார் மேற்கொண்டிருக்கலாம் என்பது குறித்த விபரங்களை வெளியிட மறுத்துள்ளார்.
பயங்கரவாத தாக்குதல் காரணமாக டெஹ்ரானின் தென்பகுதியில் உள்ள அணுநிலையில் மின்துண்டிப்பு இடம்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இஸ்ரேலிய ஊடகங்கள் புலனாய்வு வட்டாரங்களை மேற்கோள்காட்டி சைபர் தாக்குதல் இடம்பெற்றது என்ற செய்தியை வெளியிட்டுள்ளன.
ஈரானின் அணுநிலையத்தில் ஏற்பட்ட மின்துண்டிப்பிற்கு இஸ்ரேலின் சைபர் தாக்குதலே காரணம் என இஸ்ரேலின் அரச ஒலிபரப்பு சேவையான கான் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் சைபர் தாக்குதல் மூலமே மி;ன்துண்டிப்பு இடம்பெற்றது என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் சைபர் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என கருத முடியும் என ஹரெட்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
ஈரான் அணுவாயுதங்களை உற்பத்திசெய்யும் திறனை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்ற நிலையில் இந்த பிரச்சினைக்கு விபத்து காரணமில்லை திட்டமிட்ட சதிமுயற்சியே இடம்பெற்றிருக்கலாம் என கருதஇடமுண்டு பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர்தெரிவித்துள்ளார்.

Related posts: