ஈரானுக்குச் செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு விசா அனுமதி தேவையில்லை – ஈரானிய சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு!

ஈரானுக்குச் செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு விசா அனுமதி தேவையில்லை ஈரானிய சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்களை கவரும் வகையில், இந்தியா உட்பட 33 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதி வழங்குவதாக ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஈரான் அமைச்சரவை இதற்கான முடிவை எடுத்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸதுல்லா சர்காமி அறிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான பிரசாரங்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை பயனுள்ளதாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
இந்தியா, ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சவூதி, கத்தார், குவைத், லெபனான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகள் ஈரான் இலவச விசா வசதியை அறிவித்த நாடுகளில் அடங்கும்.
2023 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் ஈரானுக்குச் சென்ற வெளிநாட்டினரின் எண்ணிக்கை 44 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 48.5% அதிகம். அண்மையில் மலேசியா, இலங்கை, வியட்நாம் ஆகிய நாடுகள் விசா இல்லாமல் இந்தியர்கள் தமது நாடுகளுக்கு விஜயம் செய்யலாம் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|