ரிக் ரொக் செயலிக்கு விரைவில் தடை!

Friday, February 15th, 2019

இளைஞர், யுவதிகள் மத்தியில் பிரபலமாக பயன்படுத்தப்படும் ரிக் ரொக் அப்பினை தமிழகத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிக் ரொக் எனப்படும் செயலியால் மாணவர்கள், பெண்கள் சீரழிந்து வருகின்றனர்.

மேலும் இந்தச் செயலியினால் உருவாகும் வீடியோக்கள் பல வன்முறையைத் தூண்டி விடுகின்றன. சமுதாய சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. வெளியாகும் வீடியோக்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. எனவே அரசு இந்த ரிக் ரொக செயலியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இதற்கு முன்னர் ப்ளுவேல் கேம் என்ற உயிரை கொல்லும் விளையாட்டானது தடை செய்யப்பட்டது. அதேபோல் இந்த ரிக் ரொக் அப்பின் தலைமை இடம் எங்கிருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டு அந்த அப்பிற்கு விரைவில் தமிழகத்தில் தடைவிதிக்கப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

2022 இன் ஆரம்பத்தில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் மீள் கட்டுமானப் பணிகள் ஆரம்பம் - இலங்கை ச...
எரிபொருள் விலைச் சூத்திரம் 1 ஆம் 15ஆம் திகதிகளில் அமுல்படுத்தப்படாது - எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜே...
காலிமுகத்திடல் போராட்டம் – வகிபாகம் செய்த மூன்றாம் தரப்பு தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் ...