ஈரானில் பாரிய நிலநடுக்கம் – 170 பேர் காயம்!
Monday, November 26th, 2018
ஈரானின் மேற்கு பகுதியில் நேற்றிரவு(25) திடீரென ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 170 பேர் காயமடைந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
6.3 ரிக்டர் என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, கட்டிடங்கள் சேதம் அடைந்தன. மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கம் தாக்கிய இடங்களில் 6 மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன், மேலும் இராணுவம் மற்றும் துணை இராணுவ வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கமல் ஹாசனின் சகோதரர் காலமானார்!
சிரியாவில் ஆயுதங்களை குவிக்கும் ரஷ்யா? - நடக்கப்போவது என்ன!
ஓபிஎஸ் மனைவி காலமானார்: ஸ்டாலின், எடப்பாடி நேரில் அஞ்சலி!
|
|
|


