ஹிட்லர் பிறந்த வீட்டை சொந்தமாக்கிய ஆஸ்திரிய அரசு!

Thursday, December 15th, 2016

அடால்ஃப் ஹிட்லர் பிறந்த வீட்டை அரசு கையகப்படுத்த அனுமதிக்கும் ஒரு சட்டத்தை ஆஸ்திரிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

அந்த கட்டடத்தின் உரிமையாளரான கெர்லிண்டே பொம்மெர், அந்த கட்டடத்தை விற்கவோ அல்லது புதுப்பிக்கவோ தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் நாடாளுமன்றம் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.

நவ நாஜி ஆதரவாளர்களுக்கு இந்த வீடு ஒரு புனிதமான இடம்போல மாறிவிடக் கூடாது என்பதற்காக ஆஸ்திரிய அரசு பிரவ்நோவ் ஆம் இன் என்ற நகரில் உள்ள இந்த வீட்டை ஒரு ஏலத்தின் போது குத்தகைக்கு எடுத்திருந்தது.

தற்போது, அந்த வீட்டுக்கு என்ன ஆகும் என்பது தெளிவாக தெரியவில்லை.இந்த கட்டடத்தை இடிக்க எடுக்கப்பட்டிருந்த முந்தைய திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கட்டட உரிமையாளரான பொம்மெருக்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்கப்பட உள்ளது.

_92977762_gettyimages-615339854

Related posts: