ஈரானில் டூப்ளிகேட் மெஸ்ஸி கைது !
Wednesday, May 10th, 2017
ஈரானில் நட்சத்திர கால்பந்து வீரரான லயோனல் மெஸ்சி போலவே உருவம் கொண்ட ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி(29). சிறந்து கால்பந்து வீரருக்கான விருதை நான்கு முறை வென்று அசத்தியவர். அதுமட்டுமின்றி காலபந்து உலகில் இவர் படைத்த சாதனைகள் ஏராளம்.
இதனால் இவருக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ஈரானின் மாணவரான ரீசா பராதீஸ் என்பவர் கால்பந்து வீரர் மெஸ்சியைப் போன்று உள்ளார்.இவர் மெஸ்சியைப்போலவே உள்ளதால், பலரும் இவருடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஈரான் வீதிகளில் ரீசா பராதீஸ் நடந்து சென்றால், பொது மக்கள் இவரை சுற்றி வளைத்துக் கொள்கின்றனர்.இதன் காரணமாக வீதிகளில் அதிக அளவில் டிராபிக் ஏற்படுவதாக, அந்நாட்டு பொலிசார் அவரை பலமுறை எச்சரித்துள்ளனர்.ஆனால் அவரோ இதை கண்டுகொள்வது இல்லை. இதனால் பராதீஸை பொலிசார் கைது செய்து எச்சரித்து விடுவித்துள்ளனர்.
Related posts:
|
|
|


