ஈராக்கில் 16 துருக்கிய பெண்களுக்கு மரணதண்டனை!

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 16 துருக்கிய பெண்களுக்கு ஈராக் நீதிமன்றம் மரணதண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது.
அவர்கள் மீது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டமை மற்றும் அந்த இயக்கத்திற்கு வெளிநாட்டவர்களை இணைத்தல் ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இதேவேளைஅவர்கள் மீதான குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்டமைக்கு அமைய அவர்களுக்கு மரண தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட காரணத்தினால் ஈராக்கில் பெண்ணொருவருக்கு மரண தண்டனையும் 10 பெண்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.
Related posts:
நிலநடுக்கத்தின் விளைவால் எவரெஸ்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்!
ஈராக் ஷியா தலம் மீதான தாக்கதல் - 30 பேர் பலி
ஒரே நாளில் 55 ஆயிரம் தொற்றாளர்கள் - பிரேசிலை ஆட்டிப்படைக்கும் கொரோனா!
|
|