இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் பிராந்திய போராக வெடிக்கும் அபாயம் – லெபனானில் இருந்து அவுஸ்திரேலியர்களை வெளியேறுமாறு வெளிவிவகார அமைச்சால் அறிவுறுத்து – மக்கள் செவிசாய்க்கவில்லை என தெரிவிப்பு!
Friday, October 27th, 2023
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் பிராந்திய போராக வெடிக்கும் அபாயம் இருப்பதால் லெபனானில் இருந்து வெளியேறுமாறு அங்குள்ள அவுஸ்திரேலியர்களுக்கு வெளிவிவகார அமைச்சால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளபோதிலும், பெரும்பாலானவர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் நேற்று செனட் விசாரணை குழுவை எதிர்கொண்டனர். இதன்போதே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
” அவுஸ்திரேலியர்கள் எதிர்பார்த்தளவு லெபனானைவிட்டு வெளியேறவில்லை.” – என்று துணை செயலாளர் Craig Maclachlan தெரிவித்தார்.
லெபனானில் 15 ஆயிரம் அவுஸ்திரேலியர்கள் இருந்தாலும் 400 பேர் மட்டுமே நாடு திரும்புவதற்கு பதிவு செய்துள்ளனர் எனவும் என சுட்டிக்காட்டினார்.
அத்துடன், லெபனானில் இருந்து அவுஸ்திரேலியர்கள் வெளியேற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
போராட்டங்கள் மத்திய கிழக்கில் அதிகரித்துள்ளதால் அவுஸ்திரேலியர்கள் லெபனானில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
000
Related posts:
|
|
|


