நாட்டின் கட்டுமானத்துறையில் மிகப்பெரும் சரிவு – சிமெந்தின் விலையை குறைக்குமாறு வலியுறுத்து!

Saturday, September 16th, 2023

நாட்டில் கட்டுமானத்துறையானது 57 வீத சரிவை கண்டுள்ளது எனவும் ஆனால் தற்போது கட்டுமானப்பணிகளுக்கான மூலப்பொருட்கள் அதிகமான இலாபம் வைத்து விற்பனை செய்யப்படுகின்றது எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தேசிய ஒருங்கினைப்பாளர் சுமேத ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், 50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து பை 2150.00 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படுகின்றது ஆனால் பல்வேறு ஆய்வுகளின் பின்னர் 50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து பையை 1850.00 ரூபாவிற்கு விற்க முடியும் என கண்டறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதன் மூலம் தற்போது வரையில் 300.00 ரூபா இலாபம் ஈட்டப்படுகின்றது என்பதையும் அறிந்துக்கொள்ள முடிந்தது என்றும் அரசினால் அறவிடப்படும் வரியை நீக்கினால் 50 கிலோ கிராம் சீமெந்தை 1000.00 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வரியை முழுமையாக நீக்குமாறு அராங்கத்திடம் கோரவில்லை என்றும் அரசாங்கம் சிமெந்து பைக்கு 50 வீத வரியை அறவிடுகின்றது ஆகவே வரி அறவிடும் வீதத்தை குறைத்தால் சிமெந்துக்கான விலையை இன்னும் குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: