இலங்கையை அண்மித்து 6.2 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தகவல்!

Tuesday, November 14th, 2023

இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவிக்கின்றது.

இலங்கையின் தென் பகுதியில், கொழும்பிலிருந்து சுமார் 1326 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், 10 கிலோமீட்டர் ஆழத்திலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது எனவும்,

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக நாட்டைச் சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை தொடர்ந்தும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வடக்கு, வடமேற்கு, மேற்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில்  75 மி.மீற்றர் அளவில் கடும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது  என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை  மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன், தாழ்நில கிராமங்கள் பல நீரில் மூழ்கியுள்ளது

நேற்று திங்கட்கிழமை காலை முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன், அன்றாட செயற்பாடுகளை செய்யமுடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மக்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையும் காணப்படுவதுடன் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதோடு, பல வீடுகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

தொடர்சியாக மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும் பட்சத்தில் தாழ்நில கிராம மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது

000

Related posts: