இஸ்ரேல் – பாலத்தீன மோதல் : பாரிஸ் பேச்சுவார்த்தைக்கு நெதன்யாகூ கண்டனம்!
Friday, January 13th, 2017
பாரிஸில் வரும் ஞாயிறன்று இஸ்ரேல் – பாலத்தீன மோதலை மையமாக கொண்டு நடைபெற உள்ள மாநாடு ஒன்றின் திட்டங்களுக்கு இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகூ கடுமையாக கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுக்க பிரெஞ்சு அரசின் ஆதரவின் கீழ் பாலத்தீனர்கள் இந்த பேச்சுவார்த்தைகளை திட்டமிட்டு ஏற்பாடு செய்திருப்பதாக என்று நெதன்யாகூ தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தின் விளைவாக வரும் எந்தவொரு முடிவுகளுக்கு தன்னுடைய நாடு கட்டுப்படாது என்று நெதன்யாகூ தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் முந்தைய விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம், மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தையை ஊக்கப்படுத்துவதே இந்த கூட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்துள்ளது.

Related posts:
அமெரிக்க வர்த்தக உறவுகள் பாதிப்படையாது - சர்வதேச வர்த்தக செயலாளர்!
கொரோனா: இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது!
இலங்கையின் கடன் விவகாரம் - சரியான நேரத்தில் ஒழுங்கான நடைமுறை அவசியம் - சர்வதேச நாணய நிதியம் அழைப்பு...
|
|
|


