இலண்டனில் தாக்குதல் – பலர் காயம் !

இலண்டன் பாலத்தில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானிய நேரடிப்படி நேற்று பிற்பகல் 1.58 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர். இது ஒரு மிகப்பெரிய சம்பவமாக கருதப்படுவதாகவும் சம்பவ இடத்திற்கு லண்டன் அம்பியுலன்ஸ் சேவை உட்பட பல பிரிவுகள் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் சம்பவ இடத்தில் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்ட சத்தம் கேட்டதாக அருகில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
மலேசியாவில் சட்டவிரோத குடியேறிகள் 390 போர் கைது!
பொதுப்போக்குவரத்துகளில் மட்டுப்பாடு - அலுவலக அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு புகையிரதங்களில் பயணிக்க அ...
எக்பிரஸ் பேர்ள் கப்பல் இழப்பீடு தொடர்பான வழக்கை மாற்றுவதற்கு நடவடிக்கை : நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக...
|
|