ஹொம்ஸ் மாகாணம் சிரிய இராணுவத்தால் மீட்பு!

Monday, August 7th, 2017

சிரியாவின் ஹொம்ஸ் மாகாணம் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து வெற்றிகரமாக கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் கிழக்குப் பகுதியை நோக்கி முன்னேறிச் சென்ற சிரிய இராணுவத்தினர் ஹொம்ஸ் மாகாணத்தை கைப்பற்றியதாக மனித உரிமைகள் தொடர்பில்   கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதே வேளை, கடந்த மார்ச் மாதம் கைப்பற்றப்பட்ட பல்மைரா நகரிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலேயே அல் சுக்னா எனும் நகர் அமைந்துள்ளது.

இந்நிலையில், சிரிய இராணுவத்தினர் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கையாக அல் சுக்னா பகுதியை ஐ.எஸ் இடமிருந்து மீட்பது குறித்து அக்கறை செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ் இற்கு எதிரான போராட்டத்தில் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாட்டிற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா போராளிகள் போராடி வருகின்றனர்.

அத்துடன், அல் சுக்னா பகுதியை கைப்பற்றும் பொருட்டு சிரிய இராணுவத்தினர் மூன்று பக்கங்களில் இருந்து முன்னேறிச் செல்வதாகவும் அவர்களுடன் இணைந்து ஹிஸ்புல்லா போராளிகளும் தாக்குதல் நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதக்கத்தை திருப்பிக்கொடுத்த விஜேந்தர் சிங்!

இந்திய – சீன எல்லையில் தொடரும் பதற்றம் தணிந்து அமைதி ஏற்பட வேண்டும் என்பதற்காக, இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தனது பதக்கத்தை திருப்பிக்கொடுத்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற ஆசிய பசுபிக் குத்துச் சண்டை போட்டியில், சீனாவின் ஜூல்பிகர் மைமைதியாலியை வீழ்த்தி விஜேந்தர் சிங் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டார்.

இந்நிலையில் தனக்கு பதக்கம் வேண்டாம் என்றும், எல்லையில் அமைதி நிலவினால் போதும் என்றும் உருக்கமாகக் கூறியுள்ளார்.எல்லையில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் முயற்சிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள விஜேந்தர் சிங், இச் செய்தியானது ஊடகங்கள் வாயிலாக சீனாவை சென்றடையுமென எதிர்ப்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா – சீனா இடையே, எல்லையில் உள்ள சிக்கிம், பூட்டான், திபெத் எல்லைகள் சங்கமிக்கும் இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகின்றது. பேச்சுவார்த்தைகளில் சமரசம் எட்டப்படாத நிலையில், அண்மைய காலமாக எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: