இலண்டனில் அமிலத் தாக்குதல் : 12 பேர் காயம் !
Monday, April 17th, 2017
கிழக்கு இலண்டன்விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட அமிலத் தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்தப் பகுதியில் இருந்து 600 பேர் வரையில் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டல்ஸ்டன் (Dalston) எனும் பகுதியில் இன்று அதிகாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள அமிலம் அதிக அமிலத்தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Related posts:
மக்களுக்கு உதவிகள் சென்றடையவில்லை - ஐ.நா சிறப்பு தூதர்!
சவுதியில் பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி பாடசாலை!
சில மாதங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் - உலக சுகாதார ஸ்தாபனம்!
|
|
|


