மக்களுக்கு உதவிகள் சென்றடையவில்லை – ஐ.நா சிறப்பு தூதர்!

Friday, August 19th, 2016

சிரியாவின் முற்றுகையிடப்பட்ட நகரங்களை ஒரு உதவி வாகனம் கூட சென்றடையவில்லை எனத் தெரிவித்த ஐ.நாவின் சிறப்பு தூதர் ஸ்டஃபன் டீ மிஸ்டுரா சிரியாவில் போர் புரிந்து வரும் தரப்புகளை கடுமையாக எச்சரித்துள்ளார்.

எட்டு நிமிடங்களுக்குள் மனிதாபிமான உதவிகள் பற்றி ஆலோசிக்கும் ஒரு சந்திப்பை ரத்து செய்ததாக ஜெனிவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். சிரியா முழுக்க சண்டைகள், பாரல் வெடிகுண்டுகள், நாப்பாம், வான் தாக்குதல்கள் மற்றும் தற்கொலை குண்டுத் தாக்குதல்களாக உள்ளதால் இம்மாதிரியான பேச்சுக்கள் எந்த பயனும் அளிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

சிரியா முழுவதும் உள்ள சிறு மற்றும் பெரு நகரங்களில், அரசு அல்லது போராளிகளின் படைகளால் ஆயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிடப்பட்டுள்ளனர்.

Related posts: