இந்தோ – பசிபிக் ஸ்திரதன்மை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் – பென்டகனில் இந்திய வெளிவிவகாரஅமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்து!

Thursday, September 29th, 2022

அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், பென்டகனில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லோய்ட் ஆஸ்டினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இந்தோ-பசிபிக்கின் ஸ்திர தன்மை, பாதுகாப்பு மற்றும் வளம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்பது கறித்து வலியுறுத்தினார்.

மேலும், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வலிமையான பாதுகாப்பு தொழில் கூட்டமைப்பு மற்றும் இராணுவ பயிற்சிகள் உருவாக்கப்படுவதன் அவசியம் பற்றியும் இந்த பேச்சுவார்த்தையின்போது, உறுதி செய்தார்.

இரு நாடுகளும் விண்வெளி, சைபர், செயற்கை தொழில்நுட்பம் மற்றும் பிற தளங்களில் நெருங்கி பணியாற்றி வரும் நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் புதிய பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட இரு தரப்பினரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: