இலங்கை உட்பட 10 நாடுகளுக்கான தடையை நீடித்தது பிலிப்பைன்ஸ்!

Friday, August 13th, 2021

டெல்டா வைரஸ் அதிகம் பரவும் சூழ்நிலை காரணமாக இலங்கை உட்பட பத்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான பயணத் தடையை ஓகஸ்ட் இறுதிவரை பிலிப்பைன்ஸ் நீட்டித்துள்ளது.

அத்துடன் ஓகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 31 வரை பயணக் கட்டுப்பாடுகளை நீட்டிக்க கொரோனா வைரஸ் பணிக்குழுவின் பரிந்துரையை ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே அங்கீகரித்தார் என்று ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் ஹாரி ரோக் ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்பதாக ஏப்ரல் 27 அன்று முதன்முதலில் விதிக்கப்பட்ட பயணத் தடை, பல முறை நீட்டிக்கப்பட்டது.

இந்த பயணத் தடை பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேஷியாவை உள்ளடக்கியது.

பிலிப்பைன்ஸில் உள்ள அதிகாரிகள் நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் போராடுகின்றமை குறிப்பிடத்தக்கது..

Related posts: