இலங்கைக்கு வழங்கப்படுகின்ற மில்லேனியம் சவால்களுக்கான நிதியை இடைநிறுத்துமாறு ட்ரம்பிடம் கோரிக்கை!

Tuesday, February 21st, 2017

அமெரிக்காவினால் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற மில்லேனியம் சவால்களுக்கான நிதியை இடைநிறுத்துமாறு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பிற்கான தமிழர்கள்’ என்ற புலம்பெயர் அமைப்பினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்படவில்லைஇவ்வாறான நிலையில் இந்த நிதி இலங்கைக்கு வழங்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஒபாமா நிர்வாகத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிதியின் ஊடாக வருடாந்தம் இலங்கைக்கு 900 மில்லியன் டொலர்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

afp_3120090f

Related posts: