பேச்சுவார்த்தைக்கு தயார்  – விளாடிமிர் புட்டின்!

Wednesday, March 21st, 2018

ரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட விளாடிமிர் புட்டின், பிற நாடுகளுடன் “ஆக்கபூர்வமான” பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்துள்ளார்.

ஆனால் அது நிச்சயமாக எங்களை மட்டுமே சார்ந்ததில்லை என்று புட்டின் கூறியுள்ளதுடன் இருதரப்புக்கும் ஆர்வம் இருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை சாத்தியப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான செலவினங்களை குறைப்பதாகவும் புட்டின் உறுதியளித்துள்ளார். மேற்கத்தேய தலைவர்கள் யாரும் புட்டின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றாலும், வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில் ரஷ்யாவுடன் நல்ல உறவு நிலவி வருவதாக சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங் கூறியுள்ளார்.

கசகஸ்தான், பெலாரஸ், வெனிசுவேலா, பொலிவியா மற்றும் கியூபா ஆகிய நாடுகளும் புட்டினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன.

தேர்தலின் முதல்கட்ட முடிவுகளை தொடர்ந்து மாஸ்கோவில் நடைபெற்ற பேரணியில் பேசிய புதின், “கடந்த சில ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட சாதனைகளை வாக்காளர்கள் அங்கீகரித்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

இந்த அதிபர் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் போட்டியிட தடை செய்யப்பட்ட நிலையில், புட்டின் 76 சதவீத வாக்குகளை பெற்றதாக அதிகாரபூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன.

எனினும் தேர்தலுக்கு பின்னரான கருத்துக்கணிப்பு முடிவுகளில், புட்டின் 60 சதவீத வாக்குகளை பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புட்டினின் பிரசாரம், அவருக்கு அதிகப்படியான அதிகாரத்தை வழங்கும் வகையில் கூடுதல் வாக்குகளை பெற்றுதரும் என நம்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: