இரு விமானங்கள் மோதுண்டு விபத்து- ஜேர்மனியில் நான்கு பேர் பலி!
Thursday, January 25th, 2018
ஜேர்மனியில் ஒரு சிறிய ரக விமானமொன்றும் உலங்கு வானூர்தி ஒன்றும் மோதி ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் தென்மேற்கு பகுதியில் இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன
மீட்புபணிக்கான உலங்கு வானூர்தியும், பயிற்சியில் ஈடுபட்ட ஒரு விமானமுமே மோதிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானிகள் இருவரும், விமானம் மற்றும் உலங்கு வானூர்தியில் பணியாற்றிய இருவருமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனதாக தெரிய வந்துள்ளது.
விபத்துக்கான உறுதியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இன்நிலையில அந்நாட்டு பாதுகாப்புத் தரப்பினரால் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
60 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதையுடன் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!
எச்சரிக்கை ! மாலை 6 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம்!
வாராந்தம் ஏவுகணை சோதனை நடத்தப்படும் - வட கொரியா!
|
|
|


