அயர்லாந்தை புரட்டிப்போட்ட பயங்கர சூறாவளி!
Tuesday, October 17th, 2017
ஒஃபெலியா என பெயரிடப்பட்ட அசாதாரணமான சூறாவளி அயர்லாந்தை தாக்கியுள்ள நிலையில் அங்கு சகல பாடசாலைகள் கல்லூரிகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களை மூடுவதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்திலாந்திக் சமுத்திர பிராந்தியத்தில் இதற்கு முன்னர் இப்படியான பாரிய சூறாவளி ஏற்பட்டதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே அங்கு ‘உயிராபத்து ஏற்படக்கூடிய அபாய நிலை’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அயர்லாந்தின் மேற்கு கரையோர பகுதியை சூறாவளி சென்றடையும் போது அதன் தாக்கம் குறைவடையும் என காலநிலை அவதான அமைப்பு தெரிவித்துள்ள போதிலும்இ பாதிப்பின் தன்மை குறைவடையவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த சூறாவளியை அடுத்து பாரிய மழையுடன் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது வெள்ளப்பெருக்கை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Related posts:
|
|
|


