அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் ரஷ்ய ஜெட் மோதல் – அமெரிக்க இராணுவத்தின் ஐரோப்பிய பிரிவு தெரிவிப்பு!

Wednesday, March 15th, 2023

ஐரோப்பாவின் கருங்கடல் பகுதியில் அமெரிக்க MQ-9 ரீப்பர் வகை ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தின்மீது ரஷ்ய Su-27 ஜெட் போர் விமானம் மோதியதாக அமெரிக்க இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராணுவத்தின் ஐரோப்பிய பிரிவு இந்த மோதலை உறுதிப்படுத்தி தகவல் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க விமானப்படை தளபதி ஜேம்ஸ் ஹெக்கர் வெளியிட்டுள்ள தகவலில், “எங்கள் MQ-9 விமானம் சர்வதேச வான்வெளியில் வழக்கமான செயல்பாடுகளை நடத்திக்கொண்டிருந்தபோது, ரஷ்ய விமானத்தால் இடைமறித்து தாக்கப்பட்டது.

இதன் விளைவாக MQ-9 விபத்துக்குள்ளாகி முழுமையான இழப்பு ஏற்பட்டது. உண்மையில், ரஷ்யர்களின் இந்த பாதுகாப்பற்ற செயலால் கிட்டத்தட்ட இரண்டு விமானங்களும் பாதிப்புக்குள்ளாகின” என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: