சுவிட்சர்லாந்தின் RUAG நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல்

Friday, May 6th, 2016
சுவிட்சர்லாந்தின் RUAG நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸ் அரசாங்கத்துக்கு சொந்தமான இந்த நிறுவனம், நாட்டின் இராணுவத்துக்கு தேவையானவற்றை விநியோகித்து வருகிறது.

தாக்குதலின் போது முக்கியமான தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும், எதற்காக இது நடந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் சுவிஸ் பாதுகாப்பு துறையின் மீது இதேபோன்றதொரு தாக்குதல் நடந்தது.

இதுகுறித்து பாதுகாப்புதுறை அமைச்சர் Guy Parmelin கூறுகையில், உலக பொருளாதார மாநாடு நடைபெற்ற சமயத்தில் சுவிஸ் பாதுகாப்பு துறையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து தாக்குதல் நடந்து கொண்டிருந்த காரணத்தால், எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழல் நிலவியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதற்கும், தற்போது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் நடத்த பயன்படுத்திய மென்பொருளை ஆராய்ந்து பார்க்கும் போது ரஷ்யாவில் இருந்து நடத்தியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

Related posts: