இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: பாகிஸ்தானில் 25 பேர் பலி!
Monday, October 17th, 2016
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஹிம் யர் கான் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த விபத்திற்கு பேருந்துகள் வேகமாக சென்றதே காரணமாக இருக்கலாம் என்று போலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.பேருந்திற்குள் சிக்கிக் கொண்ட உடல்களை மீட்க மீட்புதவி பணியாளர்கள் வெட்டும் கருவிகளை பயன்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் பலியானவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள்.இந்த விபத்து நடந்த பகுதி அருகே வசிப்பவர்கள், பேருந்துகள் மோதி கொண்ட சத்தத்தை கேட்டு வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது என்று கருதியதாக ஒரு உள்ளூர் குடியிருப்புவாசி தெரிவித்துள்ளார்.

Related posts:
நிலநடுக்கங்கள் அதிகரிக்கும்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
நாங்கள் நல்ல நண்பர்கள் - இந்தியா தொடர்பில் சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவிப்பு!
பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலில் - 10 பேர் உயிரிழப்பு!.
|
|
|


