மோடியே திட்டமிட்டார்  – ராகுல் குற்றச்சாட்டு!

Monday, August 7th, 2017

 

குஜராத்தில் தனது வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, பிரதமர் மோடியே திட்டமிட்டார் என காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த 4ஆம் திகதி குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ராகுல் காந்தி சென்றிருந்த போது, அவரது கார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவரது பாதுகாப்பு அதிகாரியொருவர் காயமடைந்தார்.

இதுகுறித்து, இந்திய நாடாளுமன்றத்திற்கு வெளியே நிருபர்களிடம் கருத்துத் தெரிவித்த ராகுல், மேற்குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடி இவ்வாறே மத்தியில் அரசியல் பயணத்தை தொடர்வதாக ராகுல் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் சகல பகுதிகளிலும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிக்கும் பா.ஜ.க, 29 மாநிலங்களில் 15 மாநிலங்களின் ஆட்சி அதிகாரத்தை தன்னகத்தே வைத்துள்ளது. நாடாளுமன்ற கீழ் சபையில் போதுமான பெரும்பான்மையை கொண்டுள்ள பா.ஜ.க, மேற்சபையில் பெரும்பான்மையை பாதுகாக்க தேவையான நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது.

இதேவேளை, குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேசங்களில் இவ்வருட இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குறித்த மாநிலங்களிலும் காலூன்ற பா.ஜ.க. வியூகங்களை வகுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: