யேமன் இராணுவத்தினர் 71 பேர் கொல்லப்பட்டதற்கு ஐ.எஸ் உரிமை கோரியது!

Tuesday, August 30th, 2016

நேற்று யேமனின் துறைமுக நகரான ஏடனிலுள்ள இராணுவப் பயிற்சி முகாமொன்றின் மீதுமேற்கொள்ளப்பட்ட கார்த் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லபட்டோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ள நிலையில், இத்தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் குழு உரிமை கோரியுள்ளது.

வடக்கு ஏடனிலுள்ள குறித்த முகாமில் புதிதாக சேருபவர்கள் கூடியிருந்த நிலையிலேயே, அவர்கள் மீது தாக்குதலாளி, தனது வாகனத்தை, திங்கட்கிழமை (29) செலுத்தியிருந்தார். இத்தாக்குதலில் 98 பேர் காயமடைந்தும் இருந்தனர்.

இராணுவத்தில் புதிதாக சேர்ந்தகளுக்கு காலையுணவை எடுத்து வந்த ட்ரக்குக்கு பின்னால் வந்தே கட்டடத்துக்குள் தற்கொலைகுண்டுதாரி நுழைந்ததாகவும், உணவுக்காக வரிசையில் நின்றவர்கள் மீதே தாக்குதலை நடத்தியதாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், தாக்குதலைத் தொடர்ந்து தகர்ந்த கூரையினுள் மாண்டு புதிதாக சேர்ந்த சிலர் மாண்டு போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தவிர, குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட சிதறல்கள், குறித்த வளாகம் முழுவதும் சிதறியதுடன், அருகிலுள்ள கட்டடங்களையும் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரேபிய வளைகுடா நாடுகளினால் ஆதரவளிக்கப்படும் யேமன் அரசாங்கத்தின் தற்காலிகத் தளமாகவுள்ள ஏடனில், அதிகாரிகளையும் பாதுகாப்புப் படைகள் இலக்கு வைத்து வரிசையாக குண்டுத் தாக்குதல்களும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஏடனுக்கு அருகிலுள்ள தென் மாகாணங்களைக் கைப்பற்றும் பொருட்டு, கடந்த இரண்டு மாதங்களாக, நூற்றுக்கணக்கான படைவீரர்களுக்கு யேமனிய அதிகாரிகள் பயிற்சியளித்து வருகின்றனர்.

download

Related posts: