இரு நாட்டு அதிகாரிகளும் ஏப்ரல் மாதம் பேச்சுவார்த்தை – இந்திய மத்திய இணையமைச்சர் முருகன் தகவல்!
Wednesday, March 1st, 2023
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினையில் ஏப்ரல் மாதம் இந்திய இலங்கை மீன்வளத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.
மத்திய இராஜாங்க அமைச்சர் முருகன் செய்தியாளர்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், நமது நாட்டில் (இந்தியா) வான்வழி, கடல்வழி, தரைவழி மேம்படுத்தும் வகையில் முன்னேற்பாடு குறித்து பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழக மீனவர்களை கைது செய்த போது மத்திய அரசு துரிதமாக செயற்பாட்டால் மீனவர்கள் மாத்திரம் விடுவிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்களது படகுகள் இலங்கை இராணுவத்தால் எடுத்துச் செல்லப்டுகின்றன.
இந்நிலையில், அவர்களின் படகுகளை மீட்கவும், இந்திய இலங்கை மீனவர் பிரச்சினையில் சுமுக தீர்வு ஏற்படும் வகையிலும், ஏப்ரல் மாதம் இந்திய இலங்கை மீன்வளத் துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


