ஆங் சாங் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு!

Wednesday, April 27th, 2022

மியன்மார் நாட்டின் மக்களாட்சி ஆதரவாளரும் தேசிய ஜனநாயக லீக் கூட்டணியின் தலைவருமான ஆங் சாங் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு இராணுவம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை மோசமெனக்கூறி கடந்த வருடம் பெப்ரவரி மாதம் ஆட்சியை கைப்பற்றியது.

அத்துடன் இராணுவத்தினருக்கு எதிராக இருந்த தலைவர்களையும் கைது செய்திருந்தனர். ஆங் சாங் சூகி மீது வழக்குப் பதியப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

குறித்த வழக்கு விசாரணை 8 மாதங்கள் வரை நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில், நிதி மோசடி வழக்கில் குற்றவாளியாக்கப்பட்ட அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

000

Related posts: