மீண்டும் ஏவுகணை ஏவியது வடகொரியா!

Saturday, June 10th, 2017

தென்கொரியா மற்றும் அதற்கு ஆதரவாக செயற்படும் நாடுகளை மிரட்டும் வகையில் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தும் வடகொரியா மீண்டும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

வடகொரியாவின் கடலோர நகரான வொன்ஸானிலிருந்து இன்று காலை அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தியதாக தென்கொரிய இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஏவுகணைகள் 200 கிலோமீற்றர் தூரம் சென்று கடலில் வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கா மற்றும் தென் கொரிய கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா இந்த சோதனையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஐ.நா. பாதுகாப்பு சபை புதிய தடைகளை விதித்து ஒருவாரத்தில் வடகொரியா மேற்படி ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. அத்துடன் அணுசக்தி மற்றும் ஆயுதத் திட்டங்கள் தாமதமின்றி தொடரப்படும் என்றும் வடகொரியா அறிவித்துள்ளது

Related posts: