தமிழகத்தில் தே.மு.தி.க.வைவிட  பாரதீய ஜனதா முன்னணியில்!

Thursday, May 19th, 2016

தமிழக சட்டசபை  தேர்தலில் இதுவரையில் எண்ணப்பட்ட வாக்குகள் முடிவில் தே.மு.தி.க.வை பாரதீய ஜனதா பின்னுக்கு தள்ளிஉள்ளது.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதிமுக 134 தொகுதிகளில் முன்னிலை பெற்று உள்ளது. திமுக 83 தொகுதிகளில் முன்னிலை பெற்று உள்ளது. பாரதீய ஜனதா ஒரு தொகுதியிலும், பாட்டாளி மக்கள் கட்சி 4 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரையில் எண்ணப்பட்ட வாக்குகள் முடிவில் பாரதீய ஜனதா 2.3 சதவித வாக்குகளை பெற்று வருகிறது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள தகவலின்படி இப்போது வரையில் அரசியல் கட்சிகள் பெற்றுஉள்ள வாக்குகள் விபரம்:-

அதிமுக-  41.7%

திமுக – 30.9%

காங்கிரஸ் 6.4%

பாட்டாளி மக்கள் கட்சி 5.3%

பாரதீய ஜனதா 2.3%

தேமுதிக 2.2%

Related posts: