இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பாராட்டு!
Friday, May 17th, 2024
தங்களது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.
சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அந்த நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த இரு நாட்டு தலைவர்களும் யுக்ரைன் விடயத்தில் அரசியல் தீர்வை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதேவேளை, காசா போர் தொடர்பிலும் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஊடகங்கள் உருவாக்கியதே பொன்சேகவுக்கான பதவி : அமைச்சர் ஹரிசன்!
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களே 80 வீதம்!
பாகிஸ்தானில் கடும் மழை - பாரிய அனர்த்த நிலைமை குறித்து அந்நாட்டின் பிரதமர் ஷெபாஷ் ஷெரீபிற்கு, ஆறுதல...
|
|
|


