இராணுவத்தின் தியாகத்தால் நாடு பாதுகாப்பாக உள்ளது – இந்தியப் பிரதமர்!

இராணுவத்தின் அளப்பரிய தியாகத்தாலும் வீரத்தாலும் நாடு இன்று பாதுகாப்பாக உள்ளதென, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.குறித்த போரில் பெருமளவான ராணுவத்தினர் தங்களது உயிரை தியாகம் செய்துள்ள நிலையில், அதனை நன்றியுடன் நினைவுகூர வேண்டுமெனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1990ஆம் ஆண்டு இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் மூண்ட போர் ‘கார்கில் போர்’ எனப்படுகிறது. குறித்த போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்கள் ஒவ்வொரு வருடமும் இதே தினத்தில் நினைவுகூரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கடவுள் எனக்கு வழங்கும் காலத்தில் நாட்டின் அரசியல் கொள்கைகளை நிலைநாட்டுவேன் - பிரித்தானிய மன்னர் சார்...
பொலிஸார் சுட்டதில் இளைஞர் உயிரிழப்பு - பாரிஸ் நகரில் கலவரம்!
காசா பகுதிக்கு வழங்கும் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரத்தை துண்டித்தமை இஸ்ரேலின் மோசமான செயல் - மலேசி...
|
|