இராணுவத்தின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது அபிநந்தனுக்கு!

பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தனுக்கு, இராணுவத்தின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட வேண்டும் என, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி எழுதியுள்ள கடிதத்தில், பாகிஸ்தானின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தனுக்கு, இராணுவத்தின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் சர்வதேச அழுத்தம் காரணமாகவே, பாகிஸ்தானினால் கைது செய்யப்பட்ட அபிநந்தன் விடுவிக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார்.
பாகிஸ்தானின் பிடியில் மிக மோசமான நிலையில் இருந்த போதும், அபிநந்தன் வெளிப்படுத்திய மன உறுதியும், நாட்டுப்பற்றும் இந்தியர்களின் இதயத்தை வென்றதாகவும், தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அபிநந்தனின் வீரத்தையும், மன உறுதியையும் பாராட்டும் வகையில், அவருக்கு பரம்வீர் சக்ரா விருதை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும், முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Related posts:
|
|